நேரலை | 15வது பொதுத் தேர்தல் பிற்பகல் 1.00 மணி நிலவரம் – பாஸ் கட்சிக் குறியீட்டை அணிந்து வந்த அப்துல் ஹாடி

Malaysia, News, Politics, Polls

 48 total views,  1 views today

குமரன் | 19/11/2022

பாஸ் கட்சிக் குறியீட்டை அணிந்து வந்த அப்துல் ஹாடி – விளாசும் இணையவாசிகள்

பிற்பகல் மணி 1.53 – மாராங், திரங்கானு : வாக்குச் சாவடிக்கு பாஸ் கட்சியில் சின்னத்தைக் கொண்ட ஜாக்கெட்டை அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அணிந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தேர்தல் ஆணையமலெப்படி அனுமதித்தது என இணையவாசிகள் சமூக ஊடகங்களில் விமர்சித்தும் கடும் கண்டனத்தைத் தெரிவித்தும் வருகின்றனர்.

தமது வாக்கைச் செலுத்த ருசிலா தேசியப் பள்ளிக்கு வந்த அப்துல் ஹாடி அவாங் வந்து சென்ற போது எடுக்கப்பட்ட படம் தற்போது வைரலாகி வருகின்றது.

இது தேர்தல் ஆணையத்தில் நீதியற்றச் செயல் என இணையவாசிகள் விளாசி வருகின்றனர்.

தேர்தல் சட்டத்திற்குப் புறம்பாக இச்செயல் கருதப்படுகிறது.

Leave a Reply