நேரலை | 15வது பொதுத் தேர்தல் பிற்பகல் 2.00 மணி நிலவரம் – வாக்களிப்பைத் தாமதப்படுத்தும் தேர்தல் ஆணையம்

Malaysia, News, Politics, Polls

 54 total views,  1 views today

குமரன் | 19-11-2022

பிற்பகல் மணி 2.45, சுங்கை பூலோ, ஷா ஆலாம் – தேர்தல் ஆணைய அதிகாரிகள் வேண்டுமென்றே வாக்களிப்பைத் தாமதப்படுத்தி மிக நீளமான வரிசையில் வாக்காளர்களை அதிக நேரம் காத்திருக்கச் செய்கின்றனர் என சுங்கைபூலோ நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நம்பிக்கைக் கூட்டணியின் வேட்பாளர் இரமணன் குற்றஞ்சாட்டினார்.

வாக்காளர்களின் அடையாள அட்டை எண்களை சத்தமாகக் கூறுவதோடு அவர்களின் பெயரை எழுத்துக் கூட்டி அறிவிப்பதாக வாக்காளர்களிடம் இருந்தும் வாக்கு எண்ணிக்கை நிகராளிகளிடம் இருந்தும் தகவல் கிடைத்ததாக அவர் மேலும் சொன்னார். இச்சம்பவம் கோத்தா டாமான்சாராவில் உள்ள செக்‌ஷன் 8 இடைநிலைப்பள்ளியில் நடப்பதாகச் சுட்டிக் காட்டினார்.

மிக நீளமான வரிசையில் வெகு நேரம் காத்திர்க்கும் மூத்த வாக்காளர்கள் அவரசத்திற்குக் கழிப்பறைக்குச் செல்ல நேர்ந்தால் மீண்டும் வரிசையில் பின்னாலில் நிற்கும் நிலைமை வந்துவிடுமே என கவலையில் இருப்பதாகவும் இரமணன் குறிப்பிட்டார்.

காத்திருப்பைத் தாங்க முடியாமல் வாக்களிக்காமலேயே சில வாக்காளர்கள் வீட்டிற்குச் செல்ல முடிவு எடுத்ததைத் தமக்குத் தெரிவித்ததாகவும் இரமணன் சொன்னார்.

இவ்விவகாரத்தை செய்தியாளர்களின் இரமணன் தெரிவித்துக் கொண்டிருக்கும்போது , இது மாதிரியான செய்தியாளர் சந்திப்பை நடத்தக் கூடாது எனக் காவல் துறை அதிகாரி ஒருவர் இரமணனைக் கேட்டுக் கொண்டார்.

ஆனால், இரமணனோ, அந்த அதிகாரியை நோக்கி, மக்களுக்குத் தெரிய வேண்டும் என பதிலளித்தார்.

பிற்பகல் 1.00 மணி வரை 50% வாக்குப் பதிவு

பிற்பகல் மணி 2.13 : பிற்பகல் 1 மணி வரையில் 50 விழுக்காடு வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த 14வது பொதுத் தேர்தலில் வாக்களித்தவர்கள் 82 விழுக்காட்டினர். 2013இல் 84 விழுக்காட்டினர் வாக்களித்திருந்தனர்.

இம்முறை நடக்கும் பொதுத் தேர்தலில் முதன்முறையாக 18 வயது முதல் 20 வயது இளம் வாக்காளர்களும் தங்களின் மக்களாட்சி உரிமையைப் பெற்று வாக்களிக்கின்றனர்,

நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் ஷாரிட்ஸான் வாக்குச் சாவடியைக் கண்காணிக்க வந்தார்

பிற்பகல் மணி 2.05 – பாங்கி, சிலாங்கூர் : பாங்கி நாடாளுமன்றத் தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணியின் சார்பில் களம் காணும் ஷாரிட்ஸான் ஜோஹான் ஶ்ரீ கெராமாட்டில் திறக்கப்பட்டிருக்கும் வாக்குச் சாவடியைக் கண்காணிக்க வந்தார்.

பெட்டாலிங் ஜெயாவில் வாக்களித்த பொன்னர், அவர் இங்குள்ள வாக்குச் சாவடியைக் கண்காணிக்க அவர் வருகை மேற்கொண்டார்.

Leave a Reply