பகாங் சட்டமன்றம் கலைக்கப்பட்டது

Malaysia, News, Politics

 103 total views,  1 views today

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் பகாங் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதாக அம்மாநில மந்திரி பெசார் வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
சட்டமன்ற கலைப்பு தொடர்பில் பகாங் தெங்கு மக்கோத்தாவிடம் அனுமதி பெறப்பட்டதாகவும் சட்டமன்ற கலைப்பு இன்று அமலுக்கு வருவதாகவும் அவர் சொன்னார்.
கடந்த பொதுத் தேர்தலில் 42 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய பகாங் மாநிலத்தில் 25 தொகுதிகளை தேசிய முன்னணி கைப்பற்றி ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply