
பட்ஜெட்டில் இல்லாத ஒன்றை நான் ஏன் பொதுவில் அறிவிக்க வேண்டும் ? – மனித வள அமைச்சர் சிவகுமார் கேள்வி
280 total views, 2 views today
கோலாலம்பூர் | 27-02-2023
பட்ஜெட்டில் இல்லாத ஒன்றை பொதுவில் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று மனித வள அமைச்சர் வ சிவகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2023 பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் புத்தகத்தில் மித்ரா எனப்படும் இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாடு திட்டத்திற்கு 10 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு ஐந்து கோடி வெள்ளியும் தெக்குன் கடனுதவி திட்டத்திற்கு மூன்று கோடி வெள்ளியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் பட்ஜெட் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஆதாரங்கள் ஆகும்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே இந்த தகவல்களை நிதி அமைச்சு என்னிடம் தெரியப்படுத்தி விட்டது.
பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள தகவல்களை மட்டுமே ஆதாரங்களாக எடுத்து கொண்டு பத்திரிகையாளர் சந்திப்பில் இதை அறிவிப்பு செய்தேன்.
இல்லாத ஒன்றை வெளியே சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு என்ன என்று அவர் கேள்வியை எழுப்பினார்.