பணி ஓய்வு பெறும் தலைமையாசிரியை தமிழ் செல்விக்கு பாராட்டு விழா

Education, Indian Student, Malaysia, Malaysia, News, Tamil Schools

 48 total views,  1 views today

டி ஆர் ராஜா

புக்கிட் மெர்தஜாம் – 6/11/2022

அன்னையின் கருவிலே எதிர் நீச்சல் போட்டு ,ஜெயித்து ஜன்னிக்கும்
ஒவ்வொரு ஜீவனும் பிறந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாமல் எதையாவது
சாதிக்க வேண்டும் ,பிறருக்கும் வழிகாட்டியாக ,தூண்டுகோலாக அமைய
வேண்டும் .இந்த வரிகள் தான் தமைமையாசிரியர் வெ தமிழ்செல்வி அவர்களின்
மறு உருவம் .

நம் சமூகத்தின் வளர்ச்சிக்கும் தன் பங்காக ஆசிரியர் தொழிலை தன்னை
ஈடுப்படுத்தி தன்னாலான பங்களிப்பை கடந்த 38 வருடங்களாக ஓர்
ஆசிரியராக,தலைமையாசிரியராக பணி ஓய்வு என்பது நம்
தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் ஒரு சிறிய தேக்கம் என்பது
வெள்ளிடமலை .

அந்த வகையில் அவரின் சேவையை அயராது பணியையும் பராட்டும் கொள
ரவிக்கும் பொருட்டு பணி ஓய்வு பிரியாவிடைநிகழ்வு பெர்மாத்தாங் திங்கி
தமிழ்ப்பள்ளி பொது மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது .கெடா
சுங்கை ப்பட்டாணி நகரில் திரு இரா வேலாயுதம் ,திருமதி கோ மங்கம்மா
இணையரின் புதல்வியாவார் .

தமது ஆரம்ப கல்வியை சரஸ்வதி தமிழ்ப்பள்ளி தோட்ட த் தமிழ்ப்பள்ளியில் லும்
தமது இடைநிலை கல்வியை சுங்கை பட்டாணி இப்ராஹீம் இடைநிலை பள்ளியில் ப முதல் படிவம் முதல் படிவம் ஆறு வரை தொடர்ந்தார் .
இடை நிலை கல்விக்கு பின்னர் ஶ்ரீ கோத்தா ஆசிரியர் கல்லுரி 1982 முதல் 1984
ஆம் ஆண்டு வரை தொடர்ந்தார் .

இவர் அசிரியர் பொருபெற்ற பின்னர் 1985 புக்கிட் கென்திங் தோட்ட ஆசிரியராக தொடர்ந்து இன்று முதல் 2022 வரையில் பினாங்கு மாநிலத்தில் ஆசிரியராகவும் ,துணைத் தலைமையாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் பல பள்ளிகளில் தன் சேவையை வழங்கியுள்ளார் .

அதுமட்டுமின்றி பினாங்கு மாநில த் தமிழ்ப்பள்ளிகளின் தமைமையாசிரியர்
மன்றத்தில் 2005 முதல் 2008 வரையில் உறுப்பினராகவும் ,2008 -2014 வரையில் மன்றத்தின் பொருளாளராகவும் ,2015 முதல் 2017 மன்றத்தின் பொருளாளராகவும் 2018 முதல் 2022 மன்றத்தின் உறுப்பினராகவும்
பொருப்பேற்றுள்ளார் .

இவரின் சேவையை கருதி 1997 மெலந்தாங் ,2005,2012 சிறந்த சேவைக்கான விருது எ பி சி ,விருது பெற்றுளார் ,2012 ஆம் ஆண்டு தலைமையாயருக்கான பொருப்பை பெற்றார் . .( bidang keberhasilan utama negara (bai’ah) 2021 சிறந்த சேவைக்கான விருது எ பி சி ,விருது.அதுமட்டுமின்றி 2007 ஆம் ஆண்டு பினாங்கு மாநில கொளரவ விருதான் பி ஜெ கெ விருது பெற்றுள்ளார் .

நான்கு பிள்ளைகளுக்கு தாயான ஆசிரியர் வெ தமிழ்செல்வி ,பிள்ளைகளை
,சிறந்த பணிகளில் உயர்த்துவதற்கு உறுவாக்கியவர்.
பிறந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாமல் சமுதாயத்திற்கும் என்ன செய்தோம்
என்ற எண்ணம் கொண்டு பிறந்த பிறப்பிற்கு அர்த்தம் கொள்ள வேண்டும்
என்பது இவரது தாரக மந்திரம் .கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே
என்ற கீதை உபதேசம் .நம்மால் முடிந்தது எவ்வளவு சிறியதாக இருந்தாலும்
அதை தூய மனதோடு செய்ய வேண்டும் .அதை போல தம் சக்திக்கு இயன்ற
அளவு சிறியதாக இருந்தாலும் அதை சிறப்போடு தூய எண்ணத்தோடு
செய்ய வேண்டும் என அவருடைய மனம் போல் நம் சமுதாயத்திற்கும்

ஆசிரியர்களுக்கு நல்ல முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாக திகழ்வார்
என்பதோடு திருமதி தமிழ்செல்வி பணி ஓய்வு பெருவதால் திறமையான
தலைமையாசிரியரை இழப்பதாக கருதினாலும் இயற்கையோடு இயன்ற
மனிதன் தன் காலம் வரும் போது பணி ஓய்வு பெறுவது என்பது கட்டாயமான
நியதி என்பது நமக்கும் அறுதலான ஒரு விஷ்யமே என தமதுரையில்
மலேசிய குற்றத் தடுப்பு அறவாரியத்தின் மாநில துணைத் தலைவரும்
,பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரிய குழு
தலைவருமான டத்தொ ஶ்ரீ க புலவேந்திரன் தமதுரையில் தெரிவித்தார் ,

இப்பள்ளியின் வள ர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் ,கட்ட கட்டுமானத்திற்கும் பல
ஒத்துகழைப்பு வழங்கியவர் ,மாணவர்களின் நலனிலும் மேம்பாட்டிலும்
அதிக அக்கறை யும் முக்கிய பதவி வகித்த காலம் தொடங்கி பல சிறப்பான
நிறைவான சேவையை வழங்கியுள்ளார் .என்றும் இறைவனின் அருளால்
நீடித்த நலமும் ,ஆயுளும் பெற்று குடும்பத்தினருடன் மகிச்சியாக வாழ
வேண்டும் என்றும் அவர் தமதுரையில் கூறினார் .

இப்பள்ளியின் மேம்பாட்டிலும் அதன் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்குகள்
சொல்லிடங்கா .மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் கண்டிப்பு மிகுந்த
பாசமும் அரவணைப்பும் கொண்டு செயலாற்றியது மட்டுமின்றி
மாணவர்கள் பல சாதனைகள் வழங்க தூன்டுகோலாக இருந்தராவர் .என
பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியின் துணைதலைமையாசிரியர் திரு
கோ தியாகராஜன் கூறினார் .கல்மேல் எழுத்து போல என்றேன்றும் அவரது சேவையை நினைவு கூற கடமைப்பட்டுள்ளதாக அவர் தமதுரையில் மேலும் கூறினார் .
இந்நிகழ்வில் முன்னால் தமிழ்ப்பள்ளி அமைப்பாளரும் ,பெர்மாத்தாங் திங்கி
தமிழ்ப்பள்ளியின் ஆசிரியருமான இரா காளிதாஸ் முன்னால் தலைமையாசிரியர்கள் ,பள்ளியின் மேலாளர் வாரிய பொருப்பாளர்கள் ,பெற்றோர் அசிரியர் சங்கத் பொருப்பாளர்கள் பினாங்கு மாநில கல்வி இலாக தமிழ்மொழி உதவி இயக்குநர் சகுந்தலா ஆரோக்கியம் ,முக்கிய பொருப்பாளர்கள் ,இன்னும் பலர் கலந்துக் கொண்டனர் .

தமைமையாசிரியர் வே தமிழ்ச் செல்வி தமது பணி ஓய்வை முன்னீட்டு அனைத்து ஆசிரியர்கள் ,பள்ளிநிர்வாகம் ,பள்ளி மேலாளர் வரியத்திற்கும் நன்றி கூறியதோடுவருங்காலங்களிலும் பள்ளி புறப்பாடங்களிலும் கல்வி துறையிலும் பீடு நடைபோட வேண்டும் என்றும் தமதுரையில் கேட்டுக் கொண்டார் .

பள்ளி நிர்வாகம் ஏற்பாட்டில் இந்த பணி ஓய்வு பிரியாவிடை நிகழ்வில் பள்ளி
மாணவர்கள் தலைமையாசிரியர் நினைவு பரிசுகள் வழங்கி
சிறப்பித்தனர் ,முன்னால் ஆசிரியர்கள் ,தற்போது பினாங்கு மாநில
தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்க
பொருப்பாளர்கள் பினாங்கு மாநில கல்வி இலாக தமிழ் மொழி பிரிவு
துணை இயக்குநர் சகுந்தலா மாணவர்கள் உறவினர்கள் என மாலை
பொன்னாடைகள் அன்பளிப்புகள் வழங்கி கொளரவித்தனர் .

மாணவர்களின் படைப்புகள் ஆசிரியர்களின் அணிவகுப்புடன் ஆசிரியர்
கணவர் ஞானசேகரன் மகன்கள் , ,மகள் ,கள் ஆகியோருடன் பள்ளியை விட்டு விடைபெற்றார் .

Leave a Reply