
பண்டோரா பேப்பர்ஸ்-இல் என் பெயர் இல்லை- நஜிப்
310 total views, 1 views today
கோலாலம்பூர்-
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பண்டோரா பேப்பர்ஸ்-இல் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளுடன் தம்மை இணைக்கு செய்திகள் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளார்.
‘எனக்கு ஆஃப் சோர் வங்கிக் கணக்குகள் இல்லை, பண்டோரா பேப்பர்ஸ் பட்டியலில் நான் இல்லை. கடந்த காலத்தில் 1 எம்டிபி விவகாரத்தால் நியமிக்கப்பட்ட சட்ட நிறுவனமான வோங் & கோ பனாமா பேப்பர்ஸ் பிரச்சினையில் ஈடுபட்டுள்ள நன்கு அறியப்பட்ட அனைத்துலக சட்ட நிறுவனங்களின் கூட்டணியின் ஒரு பகுதியாக இருப்பதால் எனது பெயர் அதில் இணைக்கப்பட்டுள்ளது.
“நான் ஒருபோதும் வோங் & கோ நிறுவனத்தில் இருந்து யாரையும் நியமிக்கவில்லை அல்லது தொடர்பு கொள்ளவில்லை என்பதை நான் ஒரு செய்தியாளரின் கேள்விக்கு கூட பதிலளித்தேன் என்று டத்தோஶ்ரீ நஜிப் கூறினார்.