பதவியை தற்காப்பேன் – திருமதி உஷா

Malaysia, News, Politics

 185 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்,அக்.23-

கடந்த இரு ஆண்டுகளாக கோவிட்-19 பெருந்தொற்று நாட்டை உலுக்கிய போதிலும் மகளிர் அணிக்கான எனது சேவையில் எவ்வித தடையும் நேர்ந்ததில்லை. மகளிர் அணிக்கான எனது சேவை எப்போது தொடர்ந்து கொண்டே இருந்தது என்று  மஇகா மகளிர் பிரிவுத் தலைவி வேட்பாளர் திருமதி உஷா நந்தினி தெரிவித்தார்.

என் தலைமைத்துவத்திலான மகளிர் அணி சிறப்பாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டதாகவே இருக்கலாம். எந்த சூழ்நிலையிலும் மகளிருக்காக சேவையாற்றுவதில் நான் தயக்கம் காட்டியது கிடையாது.

எம்சிஓ காலகட்டத்தில்கூட இயங்கலை வாயிலாக மகளிருக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. என் தலைமைத்துவத்திலான நடவடிக்கைகள் என்ன? என்பதை புத்தகமாகவே பட்டியலிட்டுள்ளேன்.

E-Paper வடிவில் செய்திகளை படிக்க கீழே அழுத்தவும்…

இந்நிலையில் என் தலைமைத்துவத்தை குறை கூறும் எதிரணியில் துணைத் தலைவி பதவிக்கு போட்டியிடும் விக்னேஸ்வரி பாபுஜி, எனக்கு துணைத் தலைவியாக இருந்தபோது எவ்வித குற்றச்சாட்டும் முன்வைக்காதபோது இப்போது குறை கூறுவது அரசியல் காரணங்களுக்காக மட்டுமே.

எனினும் மகளிர் அணி போட்டியை சுமூகமாகவே எதிர்கொள்வேன் என்று கூறிய உஷா நந்தினி அணியில் துணைத் தலைவியாக டாக்டர் தனலெட்சுமி, மத்திய செயலவை உறுப்பினராக திருமதி பிரேமா, திருமதி கரம்பால் கவுர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Leave a Reply