பள்ளிகளின் போட்டி விளையாட்டு : நன்கொடை அளித்த வாரிசான் மெடிக் கியூ குழுமம் !

Education, Indian Student, Malaysia, Malaysia, News, Tamil Schools

 208 total views,  1 views today

– குமரன் –

சிலிம் ரிவர் – 28 செப் 2022

இங்குள்ள பள்ளிகளின் போட்டி விளையாட்டுக்காக வாரிசான் மெடிக் கியூ குழுமம் நன்கொடை வழங்கியுள்ளது.

இங்குள்ள சுங்கை தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும் அமினுடின் பாக்கி தேசியப் பள்ளிக்கும் இந்த நிறுவனம் நன்கொடை வழங்கியுள்ளதாக அதன் தலைமை நிர்வாக இயக்குநரும் சட்ட ஆலோசகருமான நவனீத் பிரபாகரன் தெரிவித்தார்.

விளையாட்டுப் போட்டிக்கு ஏற்படும் செலவை இந்த நன்கொடை ஓரளவு ஈடுகட்ட உதவி செய்யும் எனத் தாம் நம்புவதாகக் குறிப்பிட்டார்.

தமிழ்ப்பள்ளி, தேசியப் பள்ளி எனத் தமக்கு எந்தவிதமான வேறுபாடு இல்லை எனக் குறிப்பிட்ட அவர், தேசியப் பள்ளிகளிலும் நமது இந்திய மாணவர்கள் பயிலுகின்ற நிலையில், எல்லாப் பள்ளிகளுக்கும் நாம் உதவ முயற்சி செய்வதாகவும் அவர் சொன்னார்.

வாரிசான் மெடிக் கியூ குழுமத்தின் சமுதாயக் கடப்பாடாக இது போன்ற உதவிகளைத் தொடர்ந்து செய்துவருவதாகத் தெரிவித்த அவர் கல்வி பயிலும் மாணவர்களின் நலனில் தமது நிறுவனம் அக்கறை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நன்கொடையைப் பெற்றுக் கொண்ட இரு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நன்றியைத் தெரிவித்தனர்,

Leave a Reply