பள்ளிகளை திறப்பதில் அவசரம் வேண்டாம்

Malaysia, News

 356 total views,  2 views today

கோலாலம்பூர்-

பள்ளிகளை மீண்டும் திறக்கும் விவகாரத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என்று அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி வலியுறுத்தினார்.


நாட்டில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்று சம்பவங்களை பொருட்படுத்தாமல் பள்ளிகளை திறப்பது ஆபத்தான ஒன்றாக மாறலாம் என்று அவர் எச்சரித்தார்.


பள்ளிகளை திறக்கும் விவகாரங்களில் அவசரம் காட்ட வேண்டாம். பல விஷயங்களை நாம் ஆராய வேண்டியுள்ளது. பள்ளிகளை திறக்கும் தேதி துல்லியமானதாகவும் சரியானதாகவும் இருக்க வேண்டும்.


கோவிட்-19 தொற்று பரவல் இன்னும் கட்டுப்படுத்தப்படாத சூழலில் மாணவர்கள் தடுப்பூசியை செலுத்த கொள்ளவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமான ஒன்றாகும் என்று டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.


அக்டோபர் 3ஆம்தேதி நாட்டிலுள்ள பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று மூத்த கல்வி அமைச்சர் ரட்ஸி ஜிடின் இதற்கு முன்னர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply