பள்ளியே ஒரு கருவூலம் என்ற கொள்கையில் மாலிம் நாவார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி

Education, Indian Student, Malaysia, Malaysia, News

 295 total views,  2 views today

மாலிம் நாவார் – 28 ஏப்பிரல் 2022

கடந்த 21 ஏப்ரல் 2022 ஆம் திகதி, நாடு தழுவிய அளவில் 10 நிமிடம் சேர்ந்து வாசிப்போம் வாரீர் (Jom Baca Bersama 10 minit)  என்ற நடவடிக்கை அனைத்து பள்ளிகளிலும் நடந்தேறியது. அவ்வகையில்  மாலிம் நாவாரில் அமைந்திருக்கும் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியிலும் இந்நடவடிக்கைச் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் பள்ளியே ஒரு கருவூலம் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் இப்பள்ளி, மாணவர் செல்லும் இடமெங்கும் வாசிக்க வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் கருப்பொருள் கோணத்தை அறிமுகம் செய்தனர். மேலும் பள்ளியின் மூலிகை தோட்டத்தைச் சீர் செய்து மாணவர்கள்  மூலிகைகளைப் பற்றி அறிந்து கொள்ள மூலிகைகள் தொடர்பான  தகவல்களை வாசிப்புகாக வைத்துள்ளனர்.

வாசிப்பு பழக்கத்தை மாணவர்களிடையே மேம்படுத்த  மாதந்தோறும் அதிகமாக வாசித்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து வாசிப்பு நட்சத்திர மாணவர் சுழற்கிண்ணம் வழங்கப்படும் நடவடிக்கையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த அறிமுக விழாவில் மாணவர்கள் மிக மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் கலந்து கொண்டனர். மாணவர்களின் ஆர்வத்தை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகளைப் பள்ளி ஆசிரியர்கள் திட்டமிட்டு நடத்தவிருக்கின்றனர்.

மாலிம் நாவார்  சுற்று வட்டார மக்கள் தொடர்ந்து தமிழ் பள்ளிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதைப் பள்ளியின் தலைமையாசிரியர் \லோகேஸ்வரி ஆறுமுகம் \தெரிவித்தார்.கேட்டுக் கொண்டார். மேலும் அடுத்த ஆண்டில் முதலாம் ஆண்டு பயிலவிருக்கும் மாணவர்களையும் தேசிய மாதிரி மெதடிஸ்ட் தமிழ் பள்ளியில் பதியுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

“தமிழ்பள்ளியே நமது தேர்வு”

Leave a Reply