
பள்ளி கட்டடத்தில் இருந்து மூன்றாம் படிவ மாணவி கீழே விழுந்து பலத்த அடி !
106 total views, 1 views today
குமரன் | 6-1-2022
சிப்பாங்கில் உள்ள இடைநிலைப்பள்ளியின் கட்டடத்தில் இருந்து மூன்றாம் படிவ மாணவி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் வெளியிட்ட சிப்பாங் மாவட்டக் காவல் துறை தலைவர் துணை ஆணையர் வான் கமாருல் அஸ்ரான் வான் யூசோஃப் தெரிவிக்கயில், காலை 10.00 மணி அளவில் நடந்த இச்சம்பவத்தில் விழுந்த அந்த மாணவிக்குத் தலையில் பலத்தி அடி ஏற்பட்டதால் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
காலை 10.25 மணிக்கு புத்ராஜெயா மருத்துவமனைக்கு அந்த மாணவி கொண்டு செல்லப்பட்டார்.
இவ்விவகாரத்தில் எந்தக் குற்றவியல் நடவடிக்கையில் இல்லை எனவும் தற்போது அம்மாணவி புத்ராஜெயா மருத்துவமனையில் சிவப்பு நிற பிரிவில் மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. .