பள்ளி பேருந்து கட்டணம் உயரலாம்

Malaysia, News

 299 total views,  1 views today

ஷா ஆலம்-

கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றி பள்ளி பேருந்து சேவையைப் பயன்படுத்தும் பெற்றோர்கள் அடுத்த வாரம் அல்லது ஜூலை முதல் கட்டண உயர்வை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பராமரிப்புச் செலவுகள் அதிகரித்திருப்பதாலும் வாகன உதிரி பாகங்கள் விலை இந்த ஆண்டு 50 முதல் 80 விழுக்காடு  வரை உயர்ந்திருப்பதாலும் 6,000 க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்து நடத்துநர்கள் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடுவதே இவ்வாறான எதிர்பார்ப்புகளுக்குக் காரணம்

சிலாங்கூர் புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூர் பள்ளி பேருந்து சங்கத்தின் (PBSSPKL) தலைவர் முகமது ஹரோன் முகமது சித்திக் கூறுகையில், இந்த அதிகரிப்பு முடிவு செய்யப்படவில்லை, ஆனால் உறுப்பினர்கள் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டதாக சொன்னார்.

Leave a Reply