பழிவாங்கலை முன்னெடுத்துள்ளது எம்ஏசிசி- சிவராசா

Malaysia, News, Politics

 169 total views,  2 views today

கோலாலம்பூர்-

எம்ஏசிசி ஆணையர் அஸாம் பாக்கிக்கு சொந்தமான பங்குகள் குறித்து கேள்வி எழுப்பியதன் விளைவாக பழிவாங்கும் நடவடிக்கையை எம்ஏசிசி முன்னெடுத்துள்ளது என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா தெரிவித்தார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட தனது சேவை மைய நிர்வாகி கே.ஆர்.நவீனை கடந்த 21ஆம் தேதி எம்ஏசிசி மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளது.
ஹோட்டல் ஒன்றின் துப்புரவு பணியாளர்களுக்கு போலியான ஆவணங்களை பயன்படுத்தி பெர்மிட் பெற்று தருவதற்கு வங்காளதேச வணிகரான மொனோமியா சித்திக்குர் ரஹ்மானிடமிருந்து கடந்த 2017இல் கையூட்டு பெற்றதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கடந்த 2017 செப்டம்பர் 21ஆம் தேதி திடீரென சேவை மையத்தைச் சேர்ந்த நவீன், ஜோசுவா கலைசெல்வன், நிக்கோ காம் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்த பொய்யான குற்றச்சாட்டு எனவும் அநீதி இழைக்கப்படுகிறது எனவும் சிவராசா மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply