பழையதும் இல்லை; புதியதும் இல்லை எப்போதும் ஒரே அம்னோதான் – ஸாயிட்

Malaysia, News, Politics

 137 total views,  1 views today

கோலாலம்பூர்-

1988 ஆம் ஆண்டு சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ‘பழைய அம்னோ’வை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாயிட் ஹமிடி கூறியுள்ளார்.

பழைய அம்னோவின் ஆன்மா தற்போதைய தலைமைத்துவத்தில் செலுத்தப்பட்டாலே போதும். அது சீரான பாதையில் பயணிக்க வழிவகுக்கும்.

இப்போதைய தலைமைத்துவத்தில் பழைய அம்னோவும் இல்லை; புதிய அம்னோவும் இல்லை. எங்களுக்கு எப்போதும் ஒரே அம்னோதான்.  கருத்து வேறுபாடு இருந்தாலும் பெரும்பாலான தலைவர்களால் இன்றைய அம்னோ கொண்டாடப்படுகிறது.

அதனால் 1988இல் தடை செய்யப்பட்ட ஒரு கட்சியை உயிர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.

Leave a Reply