பவித்ரா மரணம்- சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது

Crime, Malaysia, News

 232 total views,  1 views today

ஈப்போ-

கல்லால் அடித்து கொல்லப்பட்ட பின்னர் தீயூட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட பவித்ராவின் மரணம் தொடர்பில் 20 முதல் 22 வயதுக்குட்பட்ட மேலும் நான்கு சந்தேகப் பேர்வழிகளை போலீஸ் கைது செய்துள்ளனர்.

கோலகங்சார், kampong Talang Hulu-வுக்கு அருகே Sungai kuala Kangsar ஆற்றோரத்தில் கடந்த மே 31ஆம் தேதி பவித்ராவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

21 வயதான பவித்ராவின் மரணம் தொடர்பில் அவரின் 20 வயதான காதலனை இதற்கு முன் போலீசார் கைது செய்துள்ள நிலையில் சந்தேகத்தின் பேரில் மேலும் நால்வரை கைது செய்துள்ளதாக பேரா மாநில போலீஸ் தலைவர் Mior Faridalahrash  வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply