பாகான் டத்தோ வட்டாரத் தமிழ்ப்பள்ளிகளில் சங்கீத – தேவார வகுப்பு !
465 total views, 1 views today
சுங்கை சுமுன் – 2 ஏப்பிரல் 2022
தெலுக் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வாரியக் குழுவால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்ட தேவாரம் – சங்கீத வகுப்புகள் நேற்று தொடங்கியது.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இந்த வகுப்பு நடைப்பெரும். பாகான் டத்தோ வட்டாரங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் இம்மாதிரியான சமய வகுப்புகளும் தேவார வகுப்புகளும் நடத்த ஆர்வமுள்ளோர் தங்களை தொடர்பு கொள்ளுமாறு அப்பள்ளியின் வாரியக் குழுவைச் சேர்ந்த மோகனதாசு சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார்.

நமது தமிழ்ப்பள்ளி நமது பொறுப்பு
மோகனதாசு சுப்பிரமணியம்
01153389372
வாரியக் குழு
தெலுக் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி, சுங்கை சுமூன், பாகான் டத்தோ.