பாடாங் செராய் நாடாளுமன்றத் தேர்தல் : 22-11-2022 வரை அஞ்சல் வாக்காளர் பதிவு திறந்திருக்கும்

Malaysia, News, Politics, Polls

 17 total views,  1 views today

– குமரன் –

பாடாங் செராய் – 19/11/2022

பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதிக்கான உள்நாட்டு வெளிநாட்டு அஞ்சல் வாக்காளர் பதிவு அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை 22-11-2022 வரை திறந்திருக்கும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தகவல் அளித்த தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ இக்மாருல்டின் இஷாக்,பிரிவு 1Aவைச் சேர்ந்த தேர்தல் ஆணைய பணியாளர், அதிகாரிகள், காவல் துறையினர், ஆயுதப்படையினர், ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கான பதிவு பாரம் Borang 1Aவை நிறைவு செய்து அனுப்ப வேண்டும் எனக் கூறினார்.

அந்தப் பதிவு பாரத்தை  https://www.spr.gov.my எனும் இணைய முகவரியில் இருந்து பதிவுறக்கம் செய்து அதனை முழுமையாக நிறைவு செய்து P.017 பாடாங் செராய் தொகுதி தேர்தல் ஆணைய அதிகாரியின் பணிமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பிரிவு 1Bயைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்களும் பிரிவு 1Cயைச் சேர்ந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் https://myspr.spr.gov.my/login எனும் இணையப் பக்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இது குறித்த மேல் விவரங்களை 03-8892 7040 எனும் தொலைப்பேசி எண்களில் தேர்தல் ஆணையத்தின் அஞ்சல் வாக்குப் பிரிவைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply