பாதுகாவலர் தேவசகாயத்தை தாக்கிய ஆடவர் மீது கொலை குற்றச்சாட்டு

Uncategorized

 221 total views,  2 views today

ஈப்போ-

கடமையில் இருந்த பாதுகாலவர் தேவசகாயத்தை தாக்கி அவருக்கு மரணம் விளைவித்த ஆடவரை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்படும் செக்ஷன் 302இன் கீழ் வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தங்களது தரப்பு வாதத்தை சட்டத்துறை அலுவலகம் ஏற்றுக் கொண்டிருப்பதாக வழக்கறிஞர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

கடந்தாண்டு ஈப்போ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தேவசகாயத்தைத் தாக்கிய அஹ்மாட் நோர் ஹஸார் பின் ஹாஜி முகமட் மீது செக்ஷன் 335 கீழ் நடைபெற்று வந்த வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.


இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் கம்பார், ஈப்போ பொது மருத்துவமனையின் அறிக்கைக்கு காத்திருப்பதாகவும் இன்று ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலசேகரன் தெரிவித்தார்.


இதன் மூலம் தேவசகாயத்தை தாக்கிய ஆடவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை விதிக்கப்படலாம்.

Leave a Reply