பாலர் பள்ளி ஆசிரியைகளுக்கு 10 மாதச் சம்பளம்

Uncategorized

 484 total views,  1 views today

கோலாலம்பூர்,நவ.3-

இவ்வாண்டு தொடக்கம் முதல் வழங்கப்படமால் இருந்த 200க்கும் அதிகமான பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான 10 மாதச் சம்பளம் வழங்கப்பட்டது என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தீபாவளியை கொண்டாடுவதற்கு முன்னதாக தனியார் துறையைச் சேர்ந்த அந்த ஆசிரியர்களுக்கு வெ.63 லட்சம் வரையிலான சம்பள பாக்கி இணையம் வாயிலாக செலுத்தப்பட்டது.

வட மண்டல பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான சங்கத்திற்கு வெ.2,177.700,  விவேக குழந்தைகள் மேம்பாட்டு மைய இயக்கத்தின் ஆசிரியர்களுக்கு வெ.1,378,650, சைல்ட் அமைப்பின் ஆசிரியர்களுக்கு வெ.1,846,950, டிஎஸ்எல் தனியார் பாலர் பள்ளி இயக்கத்தின் ஆசிரியர்களுக்கு வெ.579,000, மலேசிய இந்து சங்கத்தின் கீழ் இயங்கும் பாலர் பள்ளி ஆசிரியைகளுக்கு வெ.394,800 ஆகியவை வழங்கப்பட்டன.

வெ. 63 லட்சத்து 77,700  வரையிலான அந்த தொகை செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது என்றும் மஇகாவின் கோரிக்கையை ஏற்று சம்பள பாக்கியை செலுத்திய மித்ராவுக்கும் ஒற்றுமை துறை அமைச்சர் டத்தோ ஹலிமா முகமட் சாடிக்கிற்கும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

சம்பந்தப்பட்ட பாலர் பள்ளி ஆசிரியைகளுக்கு மித்ரா நிதி தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

26-X-32-2021-2

Leave a Reply