பாலியல் தொழிலாளர்களை கொலை செய்ய தலிபான்கள் திட்டம்

News, World

 298 total views,  1 views today

காபுல்-

ஆப்கானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அங்கு பாலியல் தொழிலாளர்களாக பணிபுரிந்து வரும் பெண்களை கொலை செய்ய பட்டியல் தயாரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானில் பாலியல் தொழில் சட்ட விரோதமானது. அதேசமயம் இத்தொழில் செய்வோரை தண்டிக்கும் சட்டம் எதுவும் இல்லை என்பதால், தலைநகர் காபூலில் நுாற்றுக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
‘நிக்கா’ உட்பட சில வலைதளத்தில் காணப்படும் பாலியல் தொழில் செய்யும் ஆப்கான் பெண்களின் பட்டியலை, தலிபான் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. பட்டியலில் உள்ள பெண்களை கைது செய்து கூட்டு பலாத்காரத்திற்குப் பின் பொது இடத்தில் கழுத்தை வெட்டுவது, துாக்கிலிடுவது அல்லது கல்லால் அடித்து கொலை செய்வது தலிபான்களின் வழக்கம். இதனால் காபூலில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர்.

Leave a Reply