பாலியல் வல்லுறவு வழக்கு முடிவடையாமல் அன்வார் பிரதமர் ஆகத் தகுதி இல்லை ! – அப்துல் லத்திஃப் அகமாட்

Malaysia, News, Politics, Polls

 44 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 25/10/2022

அன்வார் மீதுள்ள பாலியல் வல்லுறவு வழக்கு முடிவடையாமல் பிரதமர் ஆவதற்கு அவர் தகுதியற்றவர் என பெர்சத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் அப்துல் லத்திஃப் அகமாட் சாடியுள்ளார்.

அன்வாரின் முன்னால் உதவியாளர் முகம்மட் யூசோஃப் ராவுத்தர் தொடுத்த வழக்கின் தீர்ப்பு இன்னும் கொடுக்கப்படாத நிலையில், அவரைப் பிரதமர் வேட்பாளராகா அறிவிப்பது குறித்து நம்பிக்கைக் கூட்டணி மறு பரிசீலனை செய்வது நல்லது என முன்னாள் மெர்சிங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான அப்துல் லத்திஃப் குறிப்பிட்டார்.

மக்களாட்சி வழிமுறையை மதிப்பதோடு பிரதமர் வேட்பாளர் களங்கம் அற்றவராக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

யூசோஃப் ராவுத்தர் – அன்வார் இபுராகிம் வழக்கில் உயர்நீதிமன்றம் இறூதி முடிவை இன்னும் கொடுக்காத நிலையில், பிரதமர் வேட்பாளராக அன்வார் அறிவிக்கப்படத் தகுதியற்றவர் எனவும் அவர் தெரிவித்தார்.

மற்ற நாடுகளில் பாலியல் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கும் ஒருவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் வழக்கம் இல்லை எனக் குறிப்பிடும் அப்துல் லத்திஃப், பொது மக்களின் நம்பிக்கையைப் பெற அன்வார் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை மீட்டுக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் சொன்னார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அக். 2 ஆம் நாள் சிகாம்பூட்டில் இருக்கும் அன்வாரில் இல்லத்தில் அன்வார் இபுராகிமால் தாம் பாலிதல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டதாக யூசோஃப் ராவுத்தர் குற்றஞ்சாட்டி இருந்தார்.

அன்ந்தச் சம்பவத்தின் விளைவாக, அன்வாரின் அரசியல் வாழ்க்கையை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் சதித்திட்டத்தில் யூசோஃப் ராவுத்தர் ஈடுபட்டதாக அவரது மீது அன்வார் இபுராகிம் எதிர் வழக்கு தொடுத்தார்.

Leave a Reply