பாஸ்-க்கு 8 – பெர்சத்துவுக்கு 7 ! கெடாவில் நாடாளுமன்றத் தொகுதிப் பங்கீடு ! – சனுசி அறிவிப்பு  

Malaysia, News, Politics, Polls, Uncategorized

 81 total views,  1 views today

– குமரன் –

பெட்டாலிங் ஜெயா – 29/10/2022

கெடாவில் இருக்கின்ற 15 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஸ் கட்சிக்கு 8 தொகுதிகளும் பெர்சத்துவ்க்கு 7 தொகுதிகளும் பங்கிடப்பட்டுள்ளதாக தேசியக் கூட்டணியின் கெடா மாநிலத் தலைவர் சனுசி உறுதிப்படுத்தினார்.

இதர சில மாநிலங்களின் தேசியக் கூட்டணியுடனான கலந்துரையாடிய பிறகு முடிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

அதே சமயம், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் (ஜூன் 2023) பிறகு கெடா மாநில சட்டமன்றம் கலைக்கப்படலாம் என அவர் கோடி காட்டியுள்ளார்.

இப்போது கலைக்கப்படாத சட்டமன்றங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதவாக்கில் மாநிலத் தேர்தல் நடத்தப்படலாம். அப்போது இரமலான் மாதத்தில் நாம் இருப்போம். பின்னர் ஹஜிக்குச் செல்வார்கள். பின்னர் தியாகத் திருநாள் (ஹரி ராயா குர்பான்) கொண்டாடப்படும். அதன் பின்னரே கெடா மாநில சட்டமன்றம் கலைக்கப்படும் என்றார்.

Leave a Reply