பிஎச் கூட்டணிக்கு கீழறுப்பு செய்யும் ‘பெரும் புள்ளி’?

Malaysia, News, Politics

 116 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்கான நாள் குறிக்கப்பட்டு விட்டது. நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிட தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பான், தேசிய கூட்டணி, கெராக்கான் தானா ஆயர் கூட்டணிகள் முழு வீச்சாக பிரச்சாரத்தை தொடங்க தயாராகிக் கொண்டிருக்கின்றன.

இத்தேர்தலில் 112 இடங்களை வென்று ஆட்சியை கைப்பற்றி விடலாம் என பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கனவு காண்கிறது.

ஆனால் பக்காத்தான் ஹராப்பானின் இந்த கனவு நிராசையாகவே போய்விடும் என நம்பப்படுகிறது.

பக்காத்தான் ஹராப்பனை தேசிய முன்னணி வீழ்த்தும் என்பதை காட்டிலும் பக்காத்தான் ஹராப்பானின் பெரும் புள்ளிகளும் ஆரதவாளர்களுமே அதன் வெற்றிக்கு தடையாக இருக்க போகின்றனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி, இவன் மேலே வரக்கூடாது, குழி பறிக்கும் துரோகம் போன்றவற்றை பக்காத்தான் தலைவர்களுக்கு இன்னொரு பக்காத்தான் தலைவரே செய்யும் போது புத்ராஜெயாவை எவ்வாறு கைப்பற்ற முடியும்?
இதில் பக்காத்தானுக்கு ஆதரவு பத்திரிகை என் பிதற்றி கொண்டிருக்கும் ஓர் நாளேடு பல பக்காத்தான் தலைவர்களுக்கே குழி பறிக்கும் வேலையை செய்ய தொடங்கி விட்டது.

சகுனி‘யை கூடவே வைத்து சுற்றிக் கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வாரின் பிரதமராகும் கனவு இந்த தேர்தலிலும் வெறும் கனவாகவே போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

விளம்பரம்

Leave a Reply