பிஎச் கூட்டணியில் இளம் ரத்தம் பாய்ச்சல்- கணபதிராவ் வரவேற்பு

Malaysia, News, Politics

 176 total views,  1 views today

ஷா ஆலம்,நவ.10-

மலாக்கா மாநில தேர்தலை எதிர்கொண்டுள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அதிகமான இளம் வாக்காளர்களை களமிறக்கியுள்ளது. இதன் மூலம் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இளம் ரத்தம் பாய்ச்சப்படுவத வரவேற்கத்தக்கது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

இளம் வாக்காளர்கள் உருவெடுத்து வரும் சூழலில் இளம் தலைவர்களும் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். இளம் தலைவர்கள் உருவெடுப்பதை உறுதி செய்யும் பணியை பக்காத்தான் ஹராப்பான் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு அடித்தளமாகும்.

மலாக்கா  மாநில தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் இளம் வாக்காளர்கள் அதிகம் களமிறக்கப்பட்டுள்ளர். இது அரசியல் களத்தில் இளையோருக்கு கதவுகள் திறக்கப்பட்டுள்ளதை குறிக்கிறது.  

இளம் ரத்தம் பாய்ச்சப்படும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் இளைய தலைமுறைக்கான வாய்ப்புகள் தேசிய அரசியல் நீரோட்டத்தில் உறுதி செய்யப்படும் என்று கணபதிராவ் மேலும் சொன்னார்.

Leave a Reply