பிஎச் கூட்டணியில் டாக்டர் ஜெயகுமார் போட்டியிடாதது மஇகாவுக்கு ஆதாயமே

Malaysia, News, Politics

 81 total views,  1 views today

கோலாலம்பூர்-

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பிஎஸ் எம் கட்சி போட்டியிடாதது மஇகாவுக்கே ஆதாயம் என்று பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் எஸ்.அருட்செல்வன் தெரிவித்தார்.

டாக்டர் மைக்கல் ஜெயகுமார் அங்குன் பக்காத்தான் ஹராப்பான் சின்னத்தில்  போட்டியிடாததால் மஇகாவின் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு மிகப் பெரிய போராட்டம் அங்கு அமையாததால் அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

டாக்டர் மைக்கல் ஜெயகுமார் ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அவர் கேசவன் போன்று கிடையாது என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு சிறந்த அடையாளத்தைக் கொண்டுள்ள் டாக்டர் ஜெயகுமாரால் அத்தொகுதியை கைப்பற்ற முடியும். அதற்கு அங்குள்ள மக்களே வலுவான  ஆதரவை வழங்குவர். இப்போது டாக்டர் ஜெயகுமார் பிஎச்  சின்னத்தில் போட்டியிடாததால் மஇகாவுக்கு அது சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது என்று அவர் சொன்னார்.

Leave a Reply