பிஎச் சின்னத்தில் சுங்கை சிப்புட் தொகுதியில் போட்டி- டாக்டர் ஜெயகுமார் நம்பிக்கை

Malaysia, News, Politics

 123 total views,  1 views today

கோலாலம்பூர்-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு ஏதுவாக சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி கோரியுள்ளதை பிஎஸ்எம் கட்சி உறுதி செய்துள்ளது.

2008 முதல் 2018 வரை அத்தொகுதியை தாங்கள் தற்காத்ததாகவும் 14ஆவது பொதுத் தேர்தலின்போது பக்காத்தான் ஹராப்பான்  கூட்டணியில் பிகேஆர் சின்னத்தின் கீழ்  போட்டியிட்ட கேசவனிடம் தோல்வி அடைந்ததாக அக்கட்சியின் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் கூறினார்.

கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற பிஎச் செயலவை கூட்ட த்தில் இறுதி முடிவு இன்னும் எட்டபடவில்லை எனவும் பிஎச் தலைமைத்துவ மன்றத்தின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

டாக்டர் ஜெயகுமாருக்காக  சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை கோரியுள்ளதாகவும் பிஎச்-க்கு போட்டியாக பிற தொகுதிகளில் களமிறங்க மாட்டோம் எனவும் பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் அருட்செல்வன் இதற்கு முன்னர் ஓர் அறிக்கையின் வழி தெரிவித்திருந்தார்.

Leave a Reply