பிஎச் செயல்திட்ட அறிக்கை எடுபடுமா?

Malaysia, News, Politics

 170 total views,  1 views today

கோலாலம்பூர், நவ.10-

மலாக்கா மாநில தேர்தல் இன்னும் 10 நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தனது வெற்றியை நிலைநாட்டிக் கொள்ளுமா? என்ற கேள்வி எழுகிறது.

தேர்தலில் மக்களின் ஆதரவை பெறுவதற்கு இடைவிடாத பிரச்சாரமும் தேர்தல் வாக்குறுதிகளும்தான்  ஒவ்வொரு கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவுக்கரமாக திகழ்கின்றன.

அவ்வகையில் இன்று தனது செயல்திட்ட அறிக்கையை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மலாக்கா தேர்தலில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் அக்கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடம்  எடுபடுமா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மக்களிடம் பல வாக்குறுதிகளை அள்ளி  வீசி ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, பின்னர் தேர்தல் வாக்குறுதிகள் புனித நூல் அல்ல என்று அக்கூட்டணியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான துன் மகாதீர் கூறியிருந்ததை மக்கள் இன்னமும் மறந்திருக்க  வாய்ப்பில்லை.

இத்தகைய சூழலில் மலாக்கா தேர்தலில் அறிவிக்கப்படவுள்ள செயல் திட்ட அறிக்கை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் வெற்றிக்கு  கைகொடுக்குமா?

Leave a Reply