பிஎச் முடிவுக்காக இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறோம்- பிஎஸ்எம்

Malaysia, News, Politics

 214 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலமபூர்-

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதிக்கான பிகேஆர் வேட்பாளர் அறிவிக்கப்படாததால் பிஎஸ்எம் கட்சிக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என பலர் கூறி வந்தாலும் இன்னமும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் முடிவுக்கு காத்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தெரிவித்தார்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி, இரு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு பிஎச் கூட்டணியிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். இக்கோரிக்கை தொடர்பில் இன்னமும் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. இன்னமும் முடிவு எட்டப்படவில்லை.

ஆனாலும் சுங்கை சிப்புட் தொகுதிக்கு பிகேஆர் சார்பில் இன்னமும் வேட்பாளர் அறிவிக்கப்படாததால் பஎஸ்எம் கட்சிக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அவர் சொன்னார்.

Leave a Reply