பிஎஸ்எம், மூடா கட்சிகளுக்கு 3 நாடாளுமன்றத் தொகுதிகளை பிகேஆர் கொடுக்கிறதா ?

Malaysia, News, Politics, Polls

 96 total views,  1 views today

– குமரன் –

அம்பாங் – 29/10/2022

அரசியல் ஒத்துழைப்புக்காக மூடா, பிஎஸ்எம் ஆகியக் கட்சிகளுக்கு பிகேஆர் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொடுக்க இருக்கிறது.

சுங்கை சிப்புட், தாப்பா, செம்ப்ரோங் ஆகியத் தொகுதிகள் என பிகேஆர் கட்சியின் தேர்தல் பிரிவின் இயக்குநரான ரஃபிஸீ ரம்லி தெரிவித்தார்.

இருப்பினும், அக்கட்சிகளுக்கிடையேயான கலந்துரையாடல் இன்னும் முடியவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இன்னும் ஓரிரு நாட்களில் இவ்விவகாரம் குறித்து முடிவு அறிவிக்கப்படலாம் என்றார் அவர்.

அரசியல் ஒத்துழைப்பு நல்கும் தோழமைக் கட்சிகளுடன் கலந்து பேசாமால் இறுதி முடிவை அறிவிக்க முடியாது எனௌம் அவர் தெரிவித்தார்.

Leave a Reply