பிகேஆரிடம் சீட் கேட்டதில்லை- இந்திராணி

Malaysia, Politics

 59 total views,  1 views today

கோலாலம்பூர்-

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட தாம் ஒருபோதும் பிகேஆர் கட்சியிடம் சீட் கேட்டதில்லை என்று இத்தொகுதியின் சுயேட்சை வேட்பாளர் திருமதி இந்திராணி தெரிவித்தார்.

இன்சான் பெனாராஜு இயக்கத்தின் வாயிலாக இங்கு மேற்கொண்ட சமூக சேவைகளின் அடிப்படையிலேயே இங்கு வேட்பாளராக களமிறங்குகிறேனே தவிர பிகேரை அடிப்படையாகக் கொண்டு அல்ல என்று அவர் சொன்னார்.

https://vt.tiktok.com/ZSR3nRyQH/

கேசவன் தகுதி வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை. எங்களுக்கு தகுதியான தலைவர் தேவை. ஆதலால் நீங்கள் இங்கு போட்டியிட வேண்டும் என்று இங்குள்ள மக்கள் கேட்டுக் கொண்டதாலே தாம் இங்கு வேட்பாளராக களமிறங்குகிறேன்.

நான் கேசவன் வாக்கு மட்டுமல்ல டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆதரவு வாக்குகளையும் பிரிப்பேன் என்று அவர் சொன்னார்.

Leave a Reply