பிகேஆர்-இன் புதிய முகங்கள் : அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா ! – அன்வார் இபுராகிம்

Malaysia, News, Politics, Polls

 85 total views,  1 views today

– குமரன் –

பெட்டாலிங் ஜெயா – 29/20/2022

புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் முன்னெடுப்பில் மூத்தவர்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இது மிகுந்த சவாலான நிலை என பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இபுராகிம் தெரிவித்தார்.

அரசியலில் இதெல்லாம் சாதாரனமப்பா ! எனும் கவுண்டமணியின் வசனம்போல், இதனைத் தவிர்க்க முடியவில்லை என்றார்.

நன்றாக செயல்பட்டு வரும் புதியவர்களுக்காக நல்ல நண்பர்களையும் ஆளுமை நிறைந்தவர்களையும் தவிர்க்க வேண்டியச் சூழல் உண்டாகிறது.

ஆனால், புதிய வேட்பாளர்கள் தன்னலம் கருதாமல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என நிலைவுறுத்துகிறேன்.

நேற்று பிகேஆர் கட்சியைச் சார்ந்த 72 பேர் வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாகக் களம் காண இருப்பது அறிவிக்கப்பட்டது.

பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் ரஃபிஸி ரம்லி 2013இல் தாம் வெற்றி பெர்ற பண்டான் தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார்.

இதனிடையே, தற்போது தன் வசம் வைத்துள்ள பண்டான் தொகுதியில் இருந்து பண்டார் துன் ரஸாக் தொகுதியில் போட்டியிட உள்ளார் டாக்டர் வான் அஸிஸா

நுருல் இஸா தமது வசம் உள்ள பெர்மாத்தாங் பாவோ தொகுதியைத் தற்காக்க உள்ள நிலையில், பெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் அகமாட் ஃபைஸால் அஸுமு வென்றுள்ள தம்பூன் தொகுதியில் போட்டி இட இருக்கிறார் டத்தோ ஶ்ரீ அன்வார் இபுராகிம்.

முன்னதாக பிகேஆர் – இல் இருந்து இப்போது பெர்சத்துவில் இருக்கும் அஸ்மின் அலி தற்காக்க இருக்கும் கோம்பாக் தொகுதியில் சிலாங்கூர் மாநில முதல்வர் அமிருடின் ஷாரி போட்டியிட உள்ளார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான ரோட்ஸியா இஸ்மாயில் அம்பாங் தொகுதியில் ஸுரைடா கமாருடினை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

இந்நிலையில், அன்வார் இபுராகிமின் கோட்டையாக விளங்கும் போர்ட் டிக்சனில் போட்டியிட அவருக்குப் பதில் நெகிரி செம்பிலான் மாநில முதல்வர் அமினுடின் ஹாருன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply