
பிகேஆர்-இன் வேட்பாளர் பட்டியல் அக். 19 முடிவாகும் ! – ரஃபிஸி
193 total views, 1 views today
– குமரன் –
கோலாலம்பூர் – 12/10/2022
எதிர்வரும் 15வது பொதுத் தேர்தலில் களமிறங்கத் டமது வேட்பாளர்களின் பட்டியலை பிகேஆர் கட்சி அக். 19 ஆம் நாள் முடிவு செய்துவிடும் என அக்கட்சியின் உதவித் தலைவர் ரஃபிஸி ரம்லி தெரிவித்தார்.
அடுத்த வியாழக்கிழமை தேர்தல் ஆணையத்தின் கூட்டம் இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
வேட்பாளர் தேர்வுக் குழு தற்போது பட்டியலை செய்து கொண்டிருப்பதாகவும் அது குறித்த சந்திப்புக் கூட்ட,மும் விவாதமும் இன்று இரவு நடக்க இருப்பதாகவும் சொன்னார்.
அனைத்து மலேசியர்களுக்கும் 15வது பொதுத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என பிகேஆர் கட்சி கடந்த அக். 6 ஆம் நாள் அறிவித்திருந்தது.
இன்று காலை 10.00 மணி வரையில் 1.673 பேர் வேட்பாளராக வேண்டும் என விண்ணப்பித்து இருப்பதாகவும் ஏறத்தாழ 10,000 பேர் வரை பதிந்து கொள்ளலாம் எனக் கணிக்கப்பட்டிருப்பதாகவும் குறுப்பிட்டார்.
பிகேஆர் கட்சியின் பரிந்துரை 30%, இயங்கும் வலிமை 20%, கல்வி, திறன் குறித்தப் பின்னணி 20%, அரசியலைத் தவிர்த்த சமுதாயப் பணி 20%, சமூக ஊடகத் திறன் 10% என 5 நிலைகளில் அவர்கள் கவனிக்கப்படுவார்கள் என்றார்.
இந்த முறையிலேயே பிகேஆர் கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதாகவும் தங்களை தேசியக் கூட்டணி, தேசிய முன்னணி ஆகியவற்றில் இருந்து வேறுபடுகிறது எனவும் அவர் சொன்னார்.