பிகேஆர் தேர்தல்: உலு சிலாங்கூரில் களம் காண்கிறார் டாக்டர் சத்தியா பிரகாஷ்

Uncategorized

 286 total views,  1 views today

ரா.தங்கமணி

உலு சிலாங்கூர்-

வரும் மே மாதம் நடைபெறவுள்ள பிகேஆர் கட்சியின் தேர்தலில் உலு சிலாங்கூர் தொகுதி தலைவர் பதவிக்கு SP Care குழும தோற்றுநர் டாக்டர் சத்தியா பிரகாஷ் தெரிவித்தார்.

உலு சிலாங்குர் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான June Leow Hsiad Hui-வை எதிர்த்து களம் காணும் டாக்டர் சத்தியா, கடந்த 2008ஆம் ஆண்டு முதலே தாம் பிகேஆர் கட்சியில் அடிமட்ட தொண்டனாக அரசியல் களத்தை தொடங்கினேன்.

சிலாங்கூர் மாநிலத்தில் 22 சதவிகித்ததை பிரதிபலிக்கும் உலு சிலாங்கூர் தொகுதியில் இன்னமும் மக்களுக்கான பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அடையாள அட்டை, குடியுரிமை, வேலை வாய்ப்பு, பள்ளிக்கூடங்கள் என பல பிரச்சினைகளை இங்குள்ள மக்கள் எதிர்கொண்டே வருகின்றனர்.

இப்பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண முற்படாத இத்தொகுதியின் மக்கள் பிரதிநிதிகளை குறை சொல்லி கொண்டிருப்பதை விட தானே களத்தில் இறங்கி சுத்தம் செய்யும் முதல் முயற்சியாகவே பிகேஆர் கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட முனைந்துள்ளேன் என்று தனது அணியினரை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் டாக்டர் சத்தியா இவ்வாறு கூறினார்.

அதோடு 65 விழுக்காட்டுக்கும் அதிகமான இந்தியர்கள் வாழ்கின்ற உலு சிலாங்கூர் தொகுதியில் அம்மக்களை பிரதிநிதிக்கும் தலைவனாக ஓர் இந்தியர் இல்லாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

அதிகமான இந்தியர்கள் வாழ்கின்ற பகுதியில் அவர்களுக்கான தலைவனாக களமிறங்கும் இந்தியருக்கு நிச்சயம் ஆதரவு கிடைக்கும் எனும் நம்பிக்கையில் இந்த தேர்தலை சந்திக்கிறேன்.

நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரை எதிர்த்து போட்டியிடும் சூழலில் தமக்கான ஆதரவு வலுவாகவே உள்ளது. அனைத்து இன மக்களின் ஆதரவையும் தான் பெற்றிருக்கின்றேம். நிச்சயம் அடுத்த மாதம் நடைபெறும் பிகேஆர் தேர்தலில் தமது அணி வெல்லும் என்று டாக்டர் சத்தியா பிரகாஷ் மேலும் சொன்னார்.

இவரது அணியில் துணைத் தலைவர் பதவிக்கு சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி சைஃபுடின் ஷாஃபி  முஹமட் களமிறங்குகிறார்.

Leave a Reply