பிங்காஸ் திட்டத்தில் 30,000 பேர் பயனடைகின்றனர்- கணபதிராவ்

Malaysia, News, Politics

 77 total views,  2 views today

ஷா ஆலம்-

பரிவுமிக்க சிலாங்கூர் திட்டத்தின்  கீழ் வருமானம் குறைந்த குடும்பத்தினர் பயனடையும் வகையில் வழங்கப்பட்டு வரும் பிங்காஸ் திட்டத்தை பெறுவோரின் எண்ணிக்கை 5,000 கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

கிஸ் என முன்பு அழைக்கப்பட்டு வந்த இத்திட்ட த்தில் 25,000 பேர் வரை பயனடைந்தனர். தற்போது பிங்காஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 30,000 பேர் பயனடைந்து வருகின்றனர்.

இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்  மாதந்தோறும் 300 வெள்ளி வரையிலும் மளிகைப் பொருட்களை வாங்கிக் கொள்ளும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

கோட்டா முறையில் தகுதியாவனர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் சட்டமன்றத் தொகுதிகளின் வாயிலாக வாக்காளர் பட்டியலின்படி  தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் எனவும் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றியபோது கணபதிராவ் இவ்வாறு கூறினார்.

Leave a Reply