
பினாங்கில் சில பகுதிகளில் திடீர் வெள்ளம் !
183 total views, 1 views today
– குமரன் –
ஜோர்ஜ் டவுன் – 24 செப் 2022
இன்று அதிகாலையில் இருந்து பெய்த கனமழையால் பினாங்கு மாநிலத்தில் சில பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும், தற்காலிகத் துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்படவில்லை.
அதிகாலை 5.00 மணி அளவில் தொடங்கிய கனமழையால் பாயான் லெப்பாஸ், பாயான் பாரு, புக்கிட் ஜம்புல் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு முக்கிய சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்துத் தகவல் அளித்த பாயான் லெப்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் அஸ்ருல் ஆஸிஸ் தெரிவிக்கயில், குறிப்பாக, கம்போங் மஸ்ஜிட், கம்போங் மங்கிஸ், கம்போங் பெர்லிஸ், கம்போங் பிஞ்சாய், கம்போங் செரோனோக் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இதர செய்திகள்
– முன்கூட்டியே தேர்தலா ? மூன்று விவகாரங்கள் மீது அமைச்சரவை கவலை ?
– கேமரன் மலை உட்பட 12 இடங்களைக் குறி வைக்கும் ம.இ.கா. ?
– பொதுத் தேர்தல் தேதி : அமைச்சரவையில் இரு அணிகளா ?
தமது தரப்புக்குத் தகவல் கிடைத்தவுடன், தமது குழுவோடு நேரில் சென்று தவியதாகவும் பாயான் லெப்பாஸ் ஆற்றுப் பகுதியில் இருக்கும் பல வீடுகள் மிக மோசமாக சேதமடைந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
காலை 10.15 மணி அளவில் நீர் வற்றத் தொடங்கிய நிலையில் யாரும் தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களில் சேர்க்கப்படும் நிலை ஏற்பட வில்லை என்றார்.