பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்க மணிவிழா

Malaysia, News

 110 total views,  1 views today

பட்டர்வொர்த், ஆக 10 –
பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனது 62 ஆம் ஆண்டில் மணிவிழா கொண்டாட்டத்தை நடத்துகிறது.

1960ஆம் ஆண்டு அதிகாரவப்பூர்வமாக அமைக்கப்பட்ட பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நாட்டின் புகழ்ப்பெற்ற இலக்கிய சிகரங்களான நக்கம்பாடி கரீம், சி.டி.இராமசாமி, ஐயா சோனைமுத்து, கரு.திருவரசு, இரு.கார்த்திகேசு , சீனி நைனா முகம்மது போன்ற தலைவர்களால் சங்கம் மிகச்சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டது. மிக சிறந்த வரலாற்று பின்புலத்தை கொண்ட பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 2020இல் கோவிட்-19 காரணமாக மணிவிழாவை கொண்டாட வாய்ப்பில்லாத நிலையில் 2022ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20ஆம் நாள் பல்வேறு இலக்கிய போட்டி அங்கங்களுடன் மணிவிழா கொண்டாட்டத்தை சிறப்பாக நடத்தவுள்ளது என்று செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் செயலாளர் ச.நா வேணுகோபால் கூறினார்.

இந்த ஆண்டு மணிவிழாவில் கவிதை போட்டி, புதுக்கவிதை போட்டி, சிறுகதை போட்டி, கட்டுரைப் போட்டி என்று நடத்தவுள்ளது. சங்கத்தின் தலைவர் செ.குணாளன் தலைமையில் நடைபெறும் மணிவிழா கொண்டாட்டதில் குறுநாடகம், பட்டிமன்றம், கவியரங்கம், இலக்கிய சொற்பொழிவு என்றும் பல சுவையான அங்கங்களும் நடைபெறும் என்றும் போட்டி விவரங்கள் பிறகு முறையாக அறிவிக்கப்படும் என்று சங்கச் செயலாளர் விவரித்தார்.

Leave a Reply