பினாங்கு இந்து அறப்பணிய நிர்வாக இயக்குனர் டத்தோ இராமச்சந்திரன் தாக்கப்பட்டார்

Crime, News

 285 total views,  4 views today

டி.ஆர்.ராஜா

புக்கிட் மெர்தாஜம்

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ எம். ராமச்சந்திரன் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 7.30 மணி அளவில் தென் செபெராங் பிறை சிம்பாங் அம்பாட்டில் தனது வீட்டை வந்தடைந்தபோது பின்னால் வந்த நான்கு ஆடவர்கள் இவரை தாக்கியுள்ளனர்.
கத்தியால் தாக்கப்பட்டதால் இவருக்கு கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இவரை தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பினாங்கமாநிலத்தில் மிகச் சிறந்த சேவையாகராக விளங்கும் இவர் தாக்கப்பட்ட சம்பவம் இங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது டத்தோ ராமச்சந்திரன் செபெராங் ஜெயா மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply