பினாங்கு, சிம்பாங் அம்பாட் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா

Malaysia, News

 139 total views,  1 views today

டி.ஆர்.ராஜா

சிம்பாங் அம்பாட்-

1008 இஷ்ட லிங்க ஸ்தாபனம் மற்றும்
ஸ்ரீ சக்தி கணபதி,
ஸ்ரீ நாகதேவி சமேத ஸ்ரீ நாகராஜா,
ஸ்ரீ கால பைரவர், ஸ்ரீ நவக்கிரக மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா ( மகா கும்பாபிஷேகம் ) கார்த்திகை மாதம் 25 ம் நாள், 11.12.2022 ஞாயிற்றுக்கிழமை சுபதினத்தில், காலை மணி 9.00 முதல் 9.45 மணி வரை தனுசு லக்னத்தில் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தலைவர் மற்றும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

பினாங்கு, சிம்பாங் அம்பாட் நகரில் 1896 ஆம் வருடத்தில் எழுந்தருளிய இவ்வாலயம் சுமார் 126 வருடத்திற்கு முன் முதல் மகா கும்பாபிஷேகம் கண்டது. 1965 ஆண்டில் இரண்டாவது மகா கும்பாபிஷேகம் கண்டு 1982இல் புதுப்பிக்கப்பட்டது 1998இல் 3ஆவது மகா கும்பாபிஷேகம் இப்போதுள்ள நிர்வாகத்தினரால் சிறப்பாக நடத்தப்பட்டது.

2015இல் இணைக்கட்டடம் கட்டப்பட்டு ஆலய விஸ்தரிப்பு பணிக்குப் பிறகு 4ஆவது மகா கும்பாபிஷேகம் கண்டுள்ளது.

இதற்கிடையில், புனித தர்பன குளத்தில் 1008 இஷ்ட லிங்கங்கள் ஸ்தாபனம் செய்துள்ளதோடு
பரிவார மூர்த்திகளுக்கு சன்னதிகள் எழுப்பப்பட்டு, மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

வட மாநில அர்ச்சகர் சங்கத்தை சேர்ந்த சிவச்சாரியார்கள் முன்னின்று நடத்தும் இவ்விழாவிற்கு சிறப்பு பிரமுகர்கள் பலர் சிறப்பு வருகை தந்து விழாவை சிறப்பிக்கவுள்ளதாக தேவஸ்தான தலைவர் மு.வ.கலைமணி மற்றும் தேவஸ்தான பிரதான தலைமை குருக்கள் சிவஸ்ரீ முத்து குமார் சிவச்சாரியார் தெரிவித்தனர்.
சிறப்பான ஏற்பாடுகளோடு விழா நடத்தப்படும் எனவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக நிர்வாகத்தினர் தெரிவித்த வேளையில், அன்று இரவு 7.00 மணிக்கு ‘ கலாச்சார கலை இரவு ‘ நிகழ்ச்சி நடைபெறும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply