பினாங்கு சிலம்பப் போர்க்கலை கழகத்திற்கு சோழர் உலக சாதனை விருது

Malaysia, News

 254 total views,  1 views today

டி ஆர் ராஜா

நிபோங் திபால்-

பல்வேறு துறைகளில் அளப்பரிய சாதனைகளை படைக்கும் தரப்பினர்களைஅங்கீகரிக்கும் வகையில் சோழர் உலக சாதனை விருதை பினாங்கு மாநில சிலம்ப போர்க்கலை கழகம் வென்று சாதனை படைத்துள்ளது.


பினாங்கு போர்க்கலை சிலம்ப இயக்கத்தினர் சோழர் விருதுக்கான இலக்கவியல் மூலமாக பங்கு பெற்றனர். 25 நாடுகள் பங்குபெற்ற இந்த விருது விழ கின்னஸ் சாதனைக்கு உரிய போட்டியாக கருதப்படுவதாக பினாங்கு மாநில சிலம்பப் போர்க்கலை தலைவர் மாஸ்டர் கவிகுமார் கூறினார்.


உலக நாடுகளிலிருந்து 1,200 போட்டியாளர்கள் பங்கு பெற்ற உலக சாதனை சோழர் விருதுக்கு 12 போட்டியாளர்கள் தெர்வு பெற்றதாக அவர் விவரித்தார்.


நேரலை வாயிலாக சுமார் 12 மணி நேரம் கொண்ட இந்த போட்டியில் போ மலேசியாவிருந்து 130 போட்டியாளர்கள் பங்கு பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த போட்டியை மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் நிறைவு செய்து வைத்தார்.


கோவிட் 19 தொற்று காலத்திலும் இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று என டத்தோஶ்ரீ தனேந்திரன் தெரிவித்தார்.
இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு ” சோழர் உலக சாதனை ” சான்றிதழ் வழங்கப்பட்டது.


இதனிடையே பினாங்கு சிலம்ப போர் கலை இயக்கத்திற்கு தொடக்க காலம் முதல் டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு தெரிவித்து வருவதாக மாஸ்டர் கவிக்குமார் தெரிவித்தார்.

Leave a Reply