பினாங்கு ம.இ.கா. மகளிர் பிரிவு தேர்தல் இயந்திரம் தொடங்கியது !

Malaysia, News, Politics, Polls

 113 total views,  1 views today

– குமரன் –

பினாங்கு  – 20/10/2022

நாட்டின் தேர்தள் களம் சூடு பிடிக்கத் தொடங்கிய நிலையில், பினாங்கு மாநில ம.இ.கா.வின் மகளிர் பிரிவு தேர்தல் இயந்திரம் தொடக்கம் கண்டது.

தேசிய முன்னணியின் கீழ் இந்தியர்களின் கட்சியாக விளங்கும் ம.இ.கா. இந்திய வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறும் பணியின் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அதன் பொருட்டு இந்தத் தேர்தல் இயன்ந்திரத் தொடக்க விழா நடந்ததாகவும் பினாங்கு மாநில ம.இ.கா. மகளிர் பிரிவின் தலைவர் கவிதா சிவசாமி தெரிவித்தார்.

இந்த விழாவில் 15க்கும் மேற்பட்ட ம.இ.கா. பிரிவு தேர்தல் இயந்திர உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும் அவர் சொன்னார்.

ம.இ.கா.வின் மகளிர் பிரிவின் தேசியத் தலைவர் டத்தோ மோகனா முனியாண்டி இதனைத் தொடக்கி வைத்தார்.

இந்த விழாவில் பினாங்கு மாநில ம.இ.கா. தலைவர் டத்தோ தினகரனும் கலந்து கொண்டு சிறப்பு சேர்ந்த்தார்.

பினாங்கு மாநிலத்தை மீண்டும் வெற்றி கொள்வதே முதன்மை நோக்கமாக தமது தலைமையின் கீழ் இயங்கி வருவதாகக் கூறும் கவிதா, களத்தில் இறங்கி பல மாதங்களாக மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் மனநிலையையும் தேலையையும் அறிந்து செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply