பினாங்கு ம.இ.கா மகளிர் பிரிவின் சொந்தக் காய்கறியைப் பயிரிடுவோம் திட்டம் !

Education, Malaysia, Malaysia, News

 52 total views,  2 views today

– குமரன் –

பினாங்கு – 3 செட்டம்பர் 2022

பினாங்கு மாநில ம.இ.கா. மகளிர் பிரிவும் பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் இணைந்து Grow Your Own Vegetable – சொந்தக் காய்கறியைப் பயிரிடுவோம் எனும் திட்டத்தை வழிநடத்தினர்.

சொந்தமாக இயற்கை முறையில் காய்கறிகளை மகளிர் பயிடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு இந்தத் திட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஆரோக்கியமான முறையில் இயற்கையான உரத்தை எப்படி உருவாக்குவது, காய்கறி செடிகளையும் பயிர்களையும் எவ்வாறு பாதுகாப்பது போன்றவைகளை இதில் பங்கு பெறும் மகளிருக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது என பினாங்கு மாநில ம.இ.கா. மகளிர் பிரிவின் தலைவி கவிதா சிவசாமி தெரிவித்தார்.

முதல் மூன்று படிநிலைகளில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களில் இருந்து 30 பேர் தேர்தெடுக்கப்பட்டு மூலிகைச் செடிகள் பயிரிடுவதையும் அதன் நன்மைகள் குறித்தும் விளக்கப்படும் என்றார்.

ஒரு குடும்பத்தின் ஆரோக்கியம் பெரும்பாலும் மகளிர் – இல்லத்தரசிகளிடம் இருக்கிறது என்பது மறுக்கமுடியாத ஒன்று. ஆக, அதில் காய்கறிகளின் பங்கு அளப்பரியது. அவ்வாறான காய்கறிகளை இயற்கை முறையில் நாமே சொந்தமாகப் பயிரிடும்போது ஆரோக்கியத்தோடு சிக்கனத்தையும் தரவல்லது எனக் குறிப்பிட்டார் கவிதா சிவசாமி.

இந்தத் திட்டத்தின் அடுத்தக்கட்டம் வரும் 10-9-2022 காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையில் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தில் நடத்தப்பட உள்ளது

அங்கு வழங்கப்படும் மூலிகைச் செடிகளுக்கு ரிம 10.00 கட்டணமாக விதிக்கப்படும்.

Leave a Reply