பிரதமரின் இல்லத்தை பராமரிக்க வெ.38.5 மில்லியனா? அறிவுக்கு எட்டாத அறிக்கை- கணபதிராவ்

Malaysia, News, Politics

 373 total views,  1 views today

ஷா ஆலம்-

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஶ்ரீ பெர்டானாவை புதுப்பிக்க வெ.38.5 மில்லியன்  செலவிடப்பட்டுள்ளது என கூறப்படுவது அறிவுக்கு புலப்படாதது  என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ்  குறிப்பிட்டார்.

2000இல் நிர்மாணிக்கப்பட்ட இந்த இல்லத்தின் மொத்த செலவே வெ.24 மில்லியன் மட்டுமே. கடந்த 22 ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்பட்டு வந்த இந்த இல்லம் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு செலவுகளுக்கு வெ.38.5 மில்லியன் செலவிடப்பட்ட்தாக கூறப்படுவது ஏற்புடையதல்ல.

மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் வீணாக செலவிடப்படுகிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் தேவையில்லை என்று அவர் சொன்னார்.

Leave a Reply