
பிரதமரும் அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்- டத்தோஶ்ரீ தனேந்திரன்
339 total views, 1 views today
ஜோர்ஜ்டவுன் –
கோவிட்-19 பெருந்தொற்றை கையாள்வதில் தோல்வி கண்டுள்ளதற்கு பொறுப்பேற்று பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசினும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் வலியுறுத்தினார்.
கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதில் தோல்வி, அரசாங்கத்திற்கும் அரண்மனைக்கும் இடையிலான உறவில் விரிசல், பொய் தகவலை வழங்கி மக்கள் பிரதிநிதிகளையும் மக்களையும் குழப்புவது என பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் அண்மைய நடவடிக்கைகள் யாவும் நாட்டின் சுபிட்சத்திற்கு ஊறு விளைவிப்பதாக அமைந்துள்ளது.
ஆகவே, பெரிக்காத்தான் நேஷனல் இன்னமும் ஆட்சியில் நீடிக்காமல் பதவி விலக வேண்டும் என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் குறிப்பிட்டார்.