‘பிரிக்பீல்ட்சில் பிச்சை எடுக்கும் வாழ்க்கை’- இலங்கை தம்பதியருக்கு உதவிக்கரம் நீட்டினார் மாற்றுத்திறனாளி மகேந்திரன்

Malaysia, News

 345 total views,  1 views today

கோலாலம்பூர்-

பிரிக்பீல்ஸ் வட்டாரத்தில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்த இலங்கை தம்பதியர் ஶ்ரீ சுபாஷினி, யோகலிங்கம் ஆகியோர் தங்களது சொந்த தாயகத்திற்கு திரும்புவதற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் தர்மம் தலைகாக்கும் அமைப்பின் தலைவர் மாற்றுத்திறனாளியான மகேந்திரன்.

காணாமல் போன யோகலிங்கத்தின் கடப்பிதழ் திரும்ப கிடைக்கப்பெற்ற நிலையில் ஶ்ரீ சுபாஷினிக்கு கடப்பிதழும், அவர்களின் இரண்டு வயது மகளுக்கும் இரண்டு மாத குழந்தைக்கும் அடையாள ஆவணங்களை பெற்றுக் கொடுத்து சில நல்லுள்ளங்களின் நன்கொடை உதவியோடு நாளை 17ஆம் தேதி இவர்களை தாயகத்திற்கு அனுப்பி வைக்கிறார் மகேந்திரன்.
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் ஒரே வாரத்தில் இவர்களின் ஆவணப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளார் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply