பிரிக்பீல்ட்ஸில் 12 கடைகள் உடைப்படும் விவகாரம் : ஓய்.டி.எல். நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் ! – அமைச்சர் சிவக்குமார் அறிவிப்பு

Economy, Local, Malaysia, News

 51 total views,  1 views today

பிரிக்பீல்ட்ஸ் | 16/02/2023

பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் சுமார் 12 க்கும் மேற்பட்ட இந்தியர்களின் அங்காடி கடைகள் உடைபடும் அபாயத்தை எதிர்நோக்கி இருப்பதால் இது தொடர்பில் ஓய்டிஎல். நிறுவனத்திடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மனித வள அமைச்சர் வ சிவகுமார் இன்று அறிவித்தார்

இந்த கடைகள் அகற்றப்பட்டால் காலங்காலமாக வியாபாரம் செய்து வரும் இந்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் அபாயம் உள்ளது.

இவர்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட ஓய்டிஎல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார் அவர்.

இந்த பிரச்சனைக்கு நல்ல முறையில் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் சொன்னார்.

மனித வள அமைச்சர் சிவக்குமாரின் அரசியல் செயலாளர் ரவிந்திரன் மற்றும் மீரா கட்சியின் தலைவர் டத்தோ ஆர் சந்திரகுமணன் ஆகியோர் இந்த பிரச்சனையை முன்னெடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இங்கு பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் இந்திய அங்காடி கடைக்காரர்கள் தங்களுக்கு உதவும் படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை கேட்டுக் கொள்ளும் வகையில் பேனரை வைத்துள்ளனர்.

Leave a Reply