‘பிரியமானவளே’ பட பாணியில் ஒப்பந்த திருமணம் செய்த ஜோடி

News, World

 329 total views,  1 views today

நவீனமடைந்து வரும் மனித வாழ்வியலுக்கு ஏற்ப திருமண முறைகளும் நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகின்றன. அவ்வகையில் ‘ஒப்பந்த திருமணம்’ அடிப்படையில் ஒரு திருமண ஜோடஇதங்களது திருமணத்தை நடத்தி முடித்துள்ளது.


நடிகர் விஜய், சிம்ரன் நடிப்பில் வெளியான ‘பிரியமானவளே’ திரைப்படத்தில் ஒப்பந்த அடிப்படையில் திருமணம் செய்து கொள்ளும் காட்சி இடம்பெறும்.


அதேபோன்று அசாமைச் சேர்ந்த சாந்தி மற்றும் மிண்டு என்ற திருமண ஜோடி ஒப்பந்தம் போட்டு கல்யாணம் செய்துள்ள காணொளி சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.


‘மாதத்திற்கு ஒருமுறை தான் பீட்சா, கண்டிப்பாக தினந்தோறும் சேலை உடுத்த வேண்டும், தினமும் ஜிம் செல்ல வேண்டும், எல்லா பார்ட்டிகளிலும் நல்ல புகைப்படங்களை எடுக்க வேண்டும், 15 நாட்களுக்கு ஒருமுறை ஷாப்பிங் செல்ல வேண்டும், இரவு நேர பார்ட்டிகளை என்னோடு மட்டுமே நடத்த அனுமதி போன்ற 8 அம்ச ஒப்பந்தத்தில் இத்திருமண ஜோடி கையெழுத்திட்டுள்ளனர். இதில் சாட்சி கையெழுத்து இடம்பெற்றுள்ளது.


திருமணம் என்றாலே ‘ஒருவருக்கு ஒருவர் துணையாக, வாழ்நாள் முழுவதும் இன்ப துன்பங்களில் ஒன்றாக கடப்போம் என்பதே பிரதானதாக இருக்கும் நிலையில் இந்த திருமண ஜோடியின் ஒப்பந்தம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply