பிற கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு முஹிடினுக்கு முழு ஆதரவு (Video News)

Malaysia, News, Politics

 327 total views,  2 views today

கோலாலம்பூர் – 6 ஏப்ரல் 2022

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதர்கு ஏதுவான வியூகங்களை வகுக்க பிற கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ முஹிடின் யாசினுக்கு பெர்சத்து கட்சியின் உயர்மட்ட குழு முழு ஆதரவு வழங்கியுள்ளது.

முஹிடின் யாசின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹம்சா ஸைனுடின் தெரிவித்தார்.

கட்சி நிர்வாகம், நாட்டின் அரசியல் சூழல், நடந்து முடிந்த ஜோகூர் மாநிலத் தேர்தல் குறித்து கட்சியின் உயர்மட்ட குழுவில் விவாதிக்கப்பட்டது.

இதன் தொடர்பில் வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் வியூகங்களை  மற்ற கட்சிகளுடன் விவாதிப்பதற்கு  தலைவருக்கு முழு ஆதரவை வழங்க உயர்மட்ட குழு முடிவு செய்துள்ளது என்று அவர் சொன்னார்.

Leave a Reply