பிற கட்சிகளுடன் விவாதிப்பேன் – டான்ஶ்ரீ முஹிடின்

Malaysia, News, Politics

 173 total views,  2 views today

கோலாலம்பூர்-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில்பல கட்சிகள் ஒருவரைக்கொருவர் மோதி கொள்வதை தவிர்ப்பதற்காக பிற கட்சிகளுடன் பெர்சத்து கட்சி விவாதத்தை தொடங்கும் என்று அதன் தலைவர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.

இது அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியிருப்பதோடு பெர்சத்துவுடன் உடன்படும் பிற கட்சிகளும் அடுத்தபொதுத் தேர்தலில் வெற்றி உறுதி செய்யலாம்.

வரும் பொதுத் தேர்தலில் பலமான கூட்டணியை உருவாக்கும் முயற்சியாக அரசாங்கத்திலும் எதிர்க்கூட்டணியிலும் உள்ள அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களை சந்தித்தாக முஹிடின் கூறினார்.

ஜோகூர் மாநில தேர்தலுக்கு பின்னர் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தன்னை அணுகியதாக அவர் மேலும் சொன்னார்.

Leave a Reply