பிற கட்சிகளை பிஎச்-இல் இணைய வேண்டியதில்லை

Malaysia, News, Politics

 201 total views,  3 views today

கோலாலம்பூர்-

பல்வேறு கட்சிகளுடன் இணைந்து பெரிய கூட்டணியாக பக்காத்தான் ஹராப்பான் வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் களமிறங்க வேண்டியதில்லை என்று  பண்டான் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி தெரிவித்தார்.

 பெஜுவாங், வாரிசான், மூடா போன்ற கட்சிகளுடன் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று அவர் சொன்னார்.

வாக்காளர்களின் செல்வாக்கை அக்ட்சிகள் பெரிய அளவில் பெற்றிருக்கவில்லை. இப்போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இருந்து  வரும் உறுப்புக் கட்சிகளே தொடர்ந்து நிலைநாட்டப்பட வேண்டும்.

பிகேஆர் கட்சி குறைந்தபட்சம் 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறும் இலக்கை கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு அக்கட்சி செயல்பட்டால்  அதிகமான எம்பிக்களை கொண்ட கட்சியாக பிகேஆர் திகழும் என்று பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவருமான ரபிசி கூறினார்.

Leave a Reply