பி40 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு புத்தாடைகளை வழங்கினார் கோபி

Malaysia, News

 101 total views,  1 views today

ரா.தங்கமணி

கிள்ளான் –

விரைவில் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை வறுமையில் உள்ள தரப்பினருக்கு உதவும் வகையில் கோத்தா கெமுனிங்  இந்திய சமூகத் தலைவர் கோபி முனியாண்டி, மைசெல் அதிகாரி திருமதி சாந்தா ஆகியோர் புத்தாடைகளை வழங்கி மகிழ்வித்தனர்.

அண்மையில் கிள்ளான், டத்தாரான் செட்டியில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தலைமையில் நடைபெற்ற ஐ-சீட் தீபாவளி சந்தையில் இந்திய சிறு வியாபாரிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் சிறுவர்கள், முதியவர்கள் என 50 பேருக்கான புத்தாடைகள் அங்கு வாங்கப்பட்டன என்று கோபி தெரிவித்தார்.

கடந்தாண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தாமான் ஶ்ரீ மூடாவைச் சேர்ந்த வறுமைக் கோட்டிலுள்ள மக்கள் இவ்வாண்டு தீபாவளி திருநாளை குதூகலத்துடன் கொண்டாட வேண்டும் எனும் நோக்கில் புத்தாடைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன என்று அவர் சொன்னார்.

விளம்பரம்

Leave a Reply